இந்தியா

மத்திய அரசு தனது சொந்த விருப்பத்தை நீதித்துறையின் மீது திணிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு

மத்திய அரசு தனது சொந்த விருப்பத்தையும் அதிகாரத்தையும் நீதித்துறையின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று கேரளா சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இன்று மலப்புரத்தில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது நீதித்துறையை தன்னிச்சையாக செயல்பட மத்திய அரசு அனுமதிப்பதில்லை எனவும் நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க கூட பாஜக தலைமையிலான மத்திய அரசு அனுமதிப்பதில்லை எனவும் சாடினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதையே மத்திய பாஜக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button