கிரைம்தமிழ்நாடுவிழுப்புரம்

ரஜினி எடுத்த முடிவால் ரசிகர் தற்கொலை – முகநூலில் உருக்கமான பதிவு

மனைவி மற்றும் குழந்தைகளை அநாதையாக விட்டச் சென்றார்

விழுப்புரத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ராஜ்குமார் என்பவர், ரஜினி அரசியலுக்கு வராததால் விரக்தியடைந்து, மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு,  தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு பகுதியில் வசிக்கும் 34 வயதான ராஜ்குமார் தீவிர ரஜினி ரசிகர்.  விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், சிறு வயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது உயிரை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் டிசம்பர் 29ஆம் தேதி அன்று ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என்று அறிவித்தார். இதனை கேட்டதில் இருந்து, அதிர்ச்சியில் உரைந்து, மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி மாலை தனது முகநூல் பக்கத்தில் ரஜினி தான் என் வாழ்க்கை இதுவே என் கடைசி பதிவு என்று பதிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது இந்த தவறான முடிவு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button