கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்: ஜி.கே.மணி

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பா.ம.க சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் விருப்பமனு விநியோகம் தி.நகரில் உள்ள அக்கட்சியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, வன்னியருக்கு மட்டுமின்றி அருந்ததியருக்கும் இட ஒதுக்கீடு கோரியவர் டாக்டர் ராமதாஸ் என்றும், வன்னியர் சமூக மக்களுக்கான தலைவர் டாக்டர் ராமதாஸ் தான் எனவும் தெரிவித்தார். மேலும் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அவர் விரைவில் அறிவிப்பார் எனப்படும் ஜிகே மணி கூறினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாமகவால் வைக்கப்பட்ட நிபந்தனைகளான மாவட்டங்களை பிரித்தல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு போன்ற பலவற்றை அதிமுக கூட்டணி நிறைவேற்றியுள்ளதாகவும், நிறைவேற்றாதவை குறித்து ராமதாஸ் அறிக்கைகளின் வாயிலாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஜி.கே.மணி தெரிவித்தார்.
I’ve read some good stuff here. I was searching for this sort of data and delighted in perusing this one. I might check things out. I like what I see so now i’m following you.
My website :라이브바카라
tadalafil pills: http://tadalafilonline20.com/ tadalafil dosage