தமிழ்நாடு

பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் கார்டு!!!

பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பாலியல் தொழிலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து குடும்ப அட்டைகள் இல்லாத 10 ஆயிரத்து 664 பாலியல் தொழிலாளிகளை கண்டறிந்து

அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button