இந்தியாகவர் ஸ்டோரிமருத்துவம்

குழந்தைகளின் உயிர்களை பறிக்கும் ‘பால் ஒவ்வாமை’ – தீர்வு தான் என்ன?

என்னதான் பாலில் அதிகப்படியான நன்மைகள் இருப்பதாக கூறப்பட்டாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

உணவு அலர்ஜி என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவான ஒன்று. தினமும் உண்ணும் உணவை நம் உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பது அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலாது. சில உணவுப்பொருட்கள் உடனடியாக இதனை வெளிக்காட்டும். அப்படி ஒன்று தான்  ‘பால் ஒவ்வாமை’. இதுகுறித்து மருத்துவர் ஜெயந்தி சசிகுமார் ஆலோசனை வழங்குகிறார்.

பால் ஒவ்வாமை என்றால் என்ன?

பிறந்த குழந்தைகளுக்கு சில மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை மட்டுமல்லாமல் அதுதான் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் சிறந்தது. ஆனால் அதன்பிறகு ஏறக்குறைய நாம் மாட்டுப்பாலை நாட தொடங்குவோம். அங்கு தான் இந்த ஒவ்வாமை பிரச்சனை ஆரம்பிக்கிறது. அதிலிருக்கும் லாக்டோ புரதங்களே இதற்கு காரணம்.

குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு:

பொதுவாக பால் அனைத்து வயதினருக்கும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். என்றாலும் உணவு செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பதால் இது குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. மேலும் இது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிறந்து 6 மாதங்கள் தொடங்கி 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு இப்பிரச்சனை ஏற்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 5% குழந்தைகளுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டாலும் கவனத்தில் கொள்ளாமல் விட்டால் ஆபத்து தான்.

அறிகுறிகள்:

பால் ஒவ்வாமை பலருக்கும் நீண்ட நாள் கழித்தே வெளியே தெரிய ஆரம்பிக்கும். வயிற்று வலி, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, மலச்சிக்கல், சருமப் பிரச்சனை போன்றவை மூலம் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அறியலாம். குழந்தைகளுக்கு இப்பிரச்சனையால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமின்றி உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

தடுப்பது எப்படி?

இப்படியான பால் ஒவ்வாமை ஏற்பட்டால் பால் மட்டுமல்லாது பால் சம்பந்தமான பொருட்கள் உண்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக பிற உணவுகளை முயற்சிக்கலாம்.

மேலும் லாக்டோஸ் இல்லாத பால் பவுடர் உள்ளிட்டவற்றை மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப வழங்கலாம்.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button