சென்னைதமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் -வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ;

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழையையொட்டி, 36 வருவாய் மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னையில் தனிக் கவனம் செலுத்தி தண்ணீர் தேங்குவது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரி குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button