சசிகலா இல்லாமல் அதிமுக இப்போது போல் எப்போதும் தொடரும்.! மு.அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.! 

 சசிகலா இல்லாமல் அதிமுக இப்போது போல் எப்போதும் தொடரும்.! மு.அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.! 

சசிகலா இல்லாமல் அதிமுக இப்போது போல் எப்போதும் தொடரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்காக வருகிற 14-ஆம் தேதி 12 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கொரானா ஊரடங்கு காலம் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவில்  எந்தவித சலசலப்பு இல்லை எனவும், கடந்த முறை சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில்  எடப்பாடி பழனிச்சாமி எதிர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும், இதேபோன்று எந்தவித சலசலப்பும் இன்றி பரபரப்பும் இன்றி மற்ற நிர்வாகிகள் நியமனமும் வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கும் இயக்கம் அதிமுக என தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், இது போன்ற கேள்விகள் எழுப்புவதற்கும் இடம் கொடுக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே முதலமைச்சராக இருந்தபோது தெரிவித்ததன் படி, 100 சதவீதம் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என தெரிவித்து அவர் சசிகலா இல்லாமல் அதிமுக இப்போது போல் எப்போதும் தொடரும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திடமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக செயல்படும் என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டின் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றமே தெரிவித்த பிறகு இதை விட வேறு என்ன வேண்டும் என தெரிவித்தவர், அதிமுக பொதுச் செயலாளர்  பதவிக்கு யாரையும் 100% சேர்ந்திருக்க மாட்டோம். எங்களது நிரந்தர பொதுச் செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் எனத் தெரிவித்தார்.