அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

சசிகலாவின் ரூ.2000 கோடி சொத்துக்கள் முடக்கம் – வருமான வரித்துறை அதிரடி

கடந்த 2017ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கின்றனர். 4 ஆண்டுகால சிறை தண்டனை பெற்றும் வரும் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரியில் விடுதலை ஆவார் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 2017ஆம் ஆண்டில் சசிகலா மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா ரெய்டு நடத்தினர். 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் சுமார் ரூ.1,600 கோடிக்கு 9 இடங்களில் வாங்கப்பட்ட சொத்துக்களும் முடக்கப்பட்டன.

மேலும் போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் எதிரே இருந்த 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தம் என கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.300 கோடி என கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை அண்மையில் வருமான வரித்துறை முடக்கியது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீட்டில் குடியேறலாம் என  நினைத்திருந்த நிலையில், சொத்துக்கள் முடக்கப்பட்டதால் சசிகலா அதிர்ச்சியடைந்தார்.

இந்தநிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சிறிதாவூர் பங்களா, கொடநாடு பங்களா உள்ளிட்ட சுமார் ரூ.2000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்ட சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button