இந்தியாகவர் ஸ்டோரிகிரைம்

எங்கள் மகள் காலை உயிர்த்தெழுவாள் – பூஜை அறையில் மகளின் சடலத்துடன் சிறப்பு பூஜை!  

2 மகள்களை தம்பள்ஸ் கருவி மூலம் அடித்துக் கொன்ற பெற்றோர், மறு நாள் உயிர்தெழுவார்கள் என கூறி பூஜை

ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் அந்த வீட்டில் இருந்து வித்தியாசமான சத்தம், கூச்சல் வந்துள்ளதை பல நாட்களாகவே அக்கம் பக்கத்தினர் கேட்டு வந்துள்ளனர். நேற்று சத்தம் அதிகமாக இருந்ததால், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.

போலீசாரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த, புருசோத்தம் நாயுடு, பின்னர் வீட்டிற்குள் புனித ஆவிகள் இருப்பதால், செருப்பை வெளியே விட்டு வரும்படி கேட்டுள்ளார். பின்னர் ஒரு வழியாக போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் ஒரு பெண்ணின் சடலம் சிவப்பு நிற துணி போர்த்தியபடி படுக்க வைக்கப்பட்டிருந்தது.

மற்றொரு அறையில், இன்னொரு இளம்பெண்ணின் சடலமும், சிவப்பு துணி போர்த்தியபடி படுக்க வைக்கப்பட்டிருந்தது. போலீசாரின் அதிர்ச்சியில் உரைந்து போய், இதுகுறித்து விசாரித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தங்கள் வீட்டில் ஒரு வித்தியாசமான ஒலி கேட்டதாகவும், தங்கள் இரு மகள்களையும், நரபலி கொடுத்தால், அவர்கள் மீண்டும் உயிர்தெழுவார்கள் என அந்த ஒலி சொன்னதாகவும் புருசோத்தம் நாயுடு சொல்ல, போலீசாருக்கு வியர்த்துக் கொட்டியுள்ளது.

புருசோத்தம் நாயுடு மற்றும் அவரது மனைவி பத்மஜா இருவரும் சேர்த்து, தங்களது மகள்களான 27 வயதான அலேக்யா, 22 வயதான சாய் திவ்யா ஆகியோரை, உடற்பயிற்சி செய்யும் உபகரணமான தம்பள்ஸ் மூலம் தலையில் அடித்து, கொன்றுள்ளனர். முதலில் ஒருவரை அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் மற்றொருவரை அடித்துக் கொன்றுள்ளனர். இதனால் அவர்கள் எழுப்பிய அபயக் குரல்தான் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு கேட்டுள்ளது. அதே நேரம் அந்த இளம்பெண்கள் இருவருக்கும், இந்த மாய மந்திரங்கள் மேல் நம்பிக்கை இருந்துள்ளது.  சாய் திவ்யா, தனது முகநூல் பக்கத்தில், சிவன் வந்து விட்டார், வேலைகள் முடிந்து விட்டது என 3 நாட்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளார்.

கணவன் மனைவி இருவரையும் போலீசார் விசாரித்த போது, ஞாயிற்றுக்கிழமையுடன் கலியுகம் முடிவுக்கு வந்து விட்டது. திங்கட்கிழமை முதல் சத்ய யுகம், அதாவது கிருத யுகம். இந்த யுகத்தில் தங்களது மகள்கள் மறுபிறவி எடுக்க உள்ளனர். 10 ஆயிரம் ஆண்டுகள் வரை அவர்கள் இனி உயிரோடு இருப்பார்கள். எனவே உடல்களை நீங்கள் தொட வேண்டாம். எங்களை பூஜை செய்ய அனுமதியுங்கள் என போலீசாரிடம் கேட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியைச் சேர்ந்த, பத்மஜா மற்றும் புருசோத்தம் நாயுடு இருவரும் நன்கு படித்தவர்கள். கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள். பள்ளி, கல்லூரிகளில் தாளாளர், முதல்வர் ஆகிய முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள்.  கடந்த ஆகஸ்ட் மாதம் சிவாலயம் தெருவில் புதிதாக வீடு வாங்கி குடியேறி இருக்கின்றனர். நன்கு படித்திருந்தும் மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போய் இருந்திருக்கின்றனர். அவர்கள் மகள்களான அலேக்யாவும் படித்தவர். சாய் திவ்யா, மும்பை ஏஆர் ரஹ்மான் இசைக்கல்லூரியில் படித்தவர். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

Related Articles

25 Comments

 1. My programmer is trying to convince me to move
  to .net from PHP. I have always disliked the idea because of the expenses.
  But he’s tryiong none the less. I’ve been using Movable-type on a number of websites for about a year and am
  nervous about switching to another platform.
  I have heard good things about blogengine.net. Is there a
  way I can import all my wordpress content into it?
  Any kind of help would be really appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button