தமிழ்நாடு

வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது ;

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீர்காழி அருகேயுள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி, தனது 7 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கூலிவேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம் சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவர்கள் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button