செய்திகள்விளையாட்டு

தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

இதேபோல் கொல்கத்தா உடனான போட்டியில் மோசமாக விளையாடிய கேதர் ஜாதவ் குறித்தும் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கல் பாலியல் மிரட்டல் விடுத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் ஓராண்டாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இது ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் மோசமான செயல்பாடாகும்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை அணி கொல்கத்தா அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் தோல்வியடைந்ததால் சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள் தோனி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு தகவல்களை பரப்பினர்.

இது உச்சகட்டமாக தோனியின் மகளான ஷிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டரில் பரவியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button