உணவுசுற்றுலா - ரயில்கள்தமிழ்நாடு

8 மாதங்கள் கெடாத பொங்கலும் – ரயில்வேயின் விளக்கமும்…!

ரயில்வே உணவு குறித்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான புகார் எழுந்தும் அது தீர்க்கப்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லவன் ரயிலில் விற்கப்பட்ட 61 கிராம் பொங்கல் குறித்து எழுந்த குற்றச்சாட்டிற்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

பொதுவாக ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் முடிந்தவரை வீட்டிலோ, ஹோட்டலில் இருந்தோ உணவு கொண்டு செல்வார்களே தவிர, தப்பித்தவறி ரயில் நிலைய உணவுகளை பெரும்பாலும் வாங்க மாட்டார்கள். காரணம் அந்த உணவுகள் சுகாதாரமற்றதாகவும், தரமாற்றதாகவும் இருப்பதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் அதற்கு தீர்வு கிடைத்த பாடில்லை.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை சென்ற பல்லவன் ரயிலில் பயணி ஒருவர் பொங்கல் வாங்கியுள்ளார். வெறும் 50 கிராம் அளவுகொண்ட அந்த பொங்கலில் விலை ரூ.80 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் உச்சப்பட்ச பொங்கலுக்கு 8 மாதங்கள் வரை காலாவதி தேதியும் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த பயணி உணவு காண்டிராக்டர்களை திட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும் இதுதொடர்பாக புகார் மனுவும் அளிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு தற்போது தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. அதில் ஐஆர்சிடிசி அனுமதி பெற்ற உணவு நிறுவனங்கள் மூலமாக தரமான உணவுகள் பாதுகாப்பாக தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 61 கிராம் கொண்ட பொங்கலை சிறிது வெந்நீர் ஊற்றி 8 நிமிடம் கழித்து பார்த்தால் 220-230 கிராம் எடைகொண்ட பொங்கலாக மாறியிருக்கும் எனவும், இதற்கான வழிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் 8 மாதங்கள் வரை எப்படி கெடாமல் இருக்கும் என்ற கேள்விக்கு கடைசிவரை விளக்கமளிக்கப்படவில்லை.

Related Articles

6 Comments

  1. I like what you guys are up too. Such clever work and reporting! Keep up the superb works guys I?¦ve incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my web site 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button