2 வீரர்களுக்கு கொரோனா… இன்றைய ஐபிஎல் போட்டி ரத்து…

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Varun Chakravarthy ODI photos and editorial news pictures from ESPNcricinfo  Images

இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மோடி மைதானத்த் இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தவிருந்தது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் நடப்பு சீசனில் ஒருமுறை மோதியுள்ளன.

இதில் 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் கேரளவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது.

IPL helps domestic players in executing their skills better, says Sandeep  Warrier | Cricket News - Times of India

இதனால் பிசிசிஐ, ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Back to top button