சென்னை அணியில் 3 பேருக்கு கொரோனா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு நேற்று கொரோனா உறுதியானது.

பயோ-பபுளில் இருந்த அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கையாக நேற்று நடைபெறவிருந்த பெங்களூரு – கொல்கத்தா போட்டி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரித்து வரும் கிளீனர் உட்பட மூவருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Back to top button