சன்ரைசர்ஸ் அணியில் இணைந்த அதிரடி பேட்ஸ்மேன்: பேட்டிங் வரிசையை பலப்படுத்திய ஐதராபாத் அணி..

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டிகள் வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐந்து நகரங்களில் மட்டும் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேஸன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேஸன் ராய்க்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதே விலைக்கு சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னருடன் சில நேரங்களில் பேர்ஸ்டோ களமிறங்கும் நிலையில் மற்றொரு நல்ல தொடக்க ஆட்டக்காரராக ஜேஸன் ராய் கிடைத்துள்ளார். கடந்த ஆண்டு சீசனில் வார்னருக்குச் சரியான தொடக்க ஆட்டக்காரர் அமையாமல் அடிக்கடி ஜோடியை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Back to top button