கொஞ்சம் ஓரமா போறியா… விராட் கோலியை தூக்கி ஓரம் கட்டிய அனுஷ்கா… வீடியோ உள்ளே

இந்திய அணி கேப்டன் விராட்கோலியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா தூக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் விராட்கோலியை அனுஷ்கா சர்மா தூக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, கோலியை பின்புறத்திலிருந்து ஒரு இன்ச் மேலே அலேக்காக தூக்குகிறார்.

இதனைக் கண்டு விராட் கோலி உட்பட அனைவருமே ஒருகணம் ஆச்சரியப்பட்டு போகின்றனர். அவர் மீண்டும் தன்னை தூக்க சொல்லி கேட்க அசராமல் அனுஷ்கா தூக்கி காட்டி “தான் பலசாலி” என்பதை நிரூபிக்கிறார்.