சென்னை அணி நிர்வாகிகள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை அணியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் தொடரில்  பெங்களூர்-கொல்கத்தா அணிகள் ஆமதாபாத்தில் இன்று மோத இருந்தன. கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்தது.

இரு கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பதால் இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்சிபி – கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.மேலும் கொரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னை அணியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Back to top button