சிஎஸ்கே அணிக்கு எதிராக என் ஆட்டமே தனி… பீதியை கிளப்பும் ரிஷப் பண்ட்

வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி முதல்முறையாக கோப்பையை வெல்லும் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் போட்டித்தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் காயம் காரணமாக டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விலக கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடக்கும்  மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் ஒரு கேப்டனாக சென்னை  அணிக்கு எதிரான முதல் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். என்னுடைய சொந்த அனுபவமும்,  தோனியிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கும் அனுபவமும் கைக்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.