ஆஸி. அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கடத்தல்

ஆஸ்திரேலிய முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெகில் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமான ஸ்டூவர்ட் மெகில் 44 டெஸ்ட் போட்டிகளில் 208 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தனது வீட்டின் அருகிலேயே கடத்தப்பட்டார்.

சிட்னி வடக்குப் பகுதியில் வசிக்கும் அவரும் இன்னொருவரும் தனிப்பட்ட காரணங்களாக மோதியுள்ளனர். பின்னர் சிலமணி நேரம் கழித்து எங்கிருந்தோ வந்த இருவர் மெகிலை காருக்குள் தள்ளி கடத்திச் சென்றனர். வேறொரு புறநகர்ப்பகுதிக்கு ஓட்டிச் சென்று மெகிலை தாக்கிய பின் விடுவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நியுசவூத் வேல்ஸ் போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button