இந்தியாவின் முதல் கிரிக்கெட் பெண் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்…

இந்தியாவின் முதல் பெண் கிரிகெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு  உடல்நல குறைவால் நேற்று காலமானார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சி.கே.நாயுது மகளான சந்திரா நாயுடு  இந்தூர் அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 1950 -களில் ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் போது பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடிவந்த சந்திரா நாயுடு  கிரிகெட் மீது கொண்ட ஆர்வத்தால், சர்வதேச போட்டியின் முதல் பெண் வர்ணனையாளராக பணியாற்றி முதல் பெண் என்ற சாதனைப்படைத்தார்.
சர்வதேச போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சந்திரா நாயுடு மத்திய பிரதேச கிரிக்கெட் குழு உறுப்பினராக இருந்து சிலகாலம் பணியாற்றிவந்தார்.  இந்த நிலையில் உடல்நல குறைவால் சந்திரா நாயுடு(88)  நேற்று மதியம் உயிரிழந்ததாக அவரது சகோதரி மகன் விஜய் நாயுடு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.