மருத்துவமனையில் கே.எல்.ராகுல்… ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் கே.எல்.ராகுல் 7 போட்டிகளில் விளையாடி 331 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் கடுமையான வயிற்று வலி  காரணமாக கே.எல்.ராகுல் பயோ-பபுளில் இருந்து வெளியே வந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கடுமையான குடல் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து  குடல்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால்  எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மயங்க் அகர்வால் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Back to top button