ரெய்னா வந்தாச்சுனு சொல்லு சிஎஸ்கே உடையில் போஸ் கொடுக்கும் தல,சின்ன தல…

சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ள டுவிட்டால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐபிஎல் 2021 சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதனிடையே முப்பை நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் போட்டியில் விளையாடாத சுரேஷ் ரெய்னா மற்றும் காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரவீந்திர ஜடேஜா அணியில் தற்போது இணைத்துள்ளனர். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் தோனி, ஜடேஜாவுடன் சிஎஸ்கே ஜெர்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்ட சுரேஷ் ரெய்னா வந்தாச்சுனு சொல்லு என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியா தொடரில் காயமடைந்து ஓய்வில் இருந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா மீண்டும் சென்னையில் அணியில் இணைந்துள்ளதால் அவர்  டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருந்தே விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.