என் பந்தில் தோனி அவுட்டானதை நான் கொண்டாடவில்லை… உண்மையைச் சொன்ன நடராஜன்

கடந்த ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட் உலகமே போற்றும் நடராஜன் கடந்து வந்த பாதையை பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 71 யார்க்கர்களை வீசிய சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜன், சென்னை கேப்டன் தோனி, பெங்களூர் அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோரை ஸ்டம்புகள் சிதற அவுட் செய்ததைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்களே மிரண்டு போயினர்.

இதற்கிடையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு கிரிக் இன்ஃபோ தளத்துக்கு நடராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில் கடந்த ஐபிஎல்லின் போது ஸ்லோ பவுன்ஸர்கள், லெக் கட்டர், இன் கட்டர் போன்ற பந்துகளை அதிகமாக வீச வேண்டும் என்றும், எப்போதும் வித்தியாசத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தோனி அறிவுரை கூறியதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

என் பந்தில் தோனி ஆட்டமிழந்ததும் தான் சந்தோஷப்படவில்லை என்றும்,  முதல் பந்தில் அடித்த சிக்ஸர் மட்டும்தான் நினைவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிவில்லியர்ஸை யார்க்கர் மூலம் ஆட்டமிழக்கச் செய்த அன்று தான் தனக்கு மகள் பிறந்தாள் என்பதையும் நடராஜன் தெரிவித்துள்ளார்.