ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை… சாதனைக்கு தயாராகும் வண்ணாரப்பேட்டை பெண்…

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி.

ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களைச் சோந்தோா் டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிபெறுவதற்காக உலகத் தரவரிசையின் அடிப்படையில் இரு இடங்கள் இருந்தன. இதில் சரி செய்யப்பட்டஅதிகாரப்பூா்வ தரவரிசையின் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றாா்.

உலகத் தரவரிசையில் தற்போது 45-ஆவது இடத்திலிருக்கும் பவானி தேவி, அதில் ஓா் இடத்தை உறுதி செய்துள்ளாா். வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி திருத்தப்பட்ட உலகத் தரவரிசை வெளியாகும்போது, பவானி தேவி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றது அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அவா் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டிக்கு தகுதிபெற்றுள்ளாா்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பவானி தேவிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முயற்சித்து தோல்வியடைந்த பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்காக பயிற்சியாளா் நிகோலா ஜனோடியின் மேற்பாா்வையில் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.