கிரிக்கெட் இல்லைன்னா இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் – எழுத்தாளர் சர்ச்சை கருத்து

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி குறித்து  தஸ்லிமா நஸ்ரீன்  கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடருக்காக சென்னை அணியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி இடம்பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் சென்னை அணியின் ஜெர்சியில் இருக்கும் மதுபான லோகோ மத நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளதால் நீக்குமாறு கோரிக்கை விடுத்தததாக தகவல் வெளியானது.

ஆனால் இதனை மறுத்த அணி நிர்வாகம் இந்த தகவல் வெறும் வதந்தி எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில் வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவரின் பதிவில், மொயின் அலி கிரிக்கெட்டில் சிக்காமல் இருந்தால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.

IPL 2021 Chennai Super Kings Moeen Ali csk moeen requests to remove alcohol  SNJ 10000 brand logo - Jansatta

இந்நிலையில் தனது கருத்திற்கு தஸ்லீமா விளக்கமளித்துள்ளார். மொயின் அலி குறித்து பதிவிட்ட கருத்து கிண்டலானது தான் என்றும், இஸ்லாமிய வெறித்தனத்தை தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.