தோனியின் அனிமேஷன் தொடர்… உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தோனியை அடிப்படையாக கொண்டு புதிதாக அனிமேஷன் தொடர் தொடங்கவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டின் ”தல” என்று செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் இந்த தொடருடன் கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் கூறப்படும் நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

‘கேப்டன் 7’  என்ற தலைப்பில் தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து சாகசங்கள் நிறைந்த கற்பனை கதை கலந்த உளவுத்தொடர் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள  ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.