பெங்களூர் அணியில் உசேன் போல்ட்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

ஐபிஎல் தொடரின் பெங்களூர் அணியின் ஜெர்சி அணிந்து உசேன் போல்ட் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதனிடையே உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரும், 8 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஜமைக்கா நாட்டின் உசேன் போல்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பெங்களூர் அணியின் ஜெர்சி அணிந்துள்ள அவர்,  அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோரை டேக் செய்து, “சேலஞ்சர்ஸ் நான் உங்களுக்கு ஒன்றை தெரியப்படுத்துக்கிறேன். இன்னமும் வேகமான பூனையாகத்தான் நான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த விராட்கோலி எந்த சந்தேகமும் இல்லை, அதனால்தான் உங்களை இப்போது எங்கள் அணியில் சேர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார். சில கூடுதல் ரன்கள் தேவைப்படும்போது யாரை அழைப்பது என்பது எங்களுக்குத் தெரியும் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Back to top button