ஐபிஎல் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை – சோகத்தில் ரசிகர்கள்

பார்வையாளர்கள் இன்றி ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் ளனர்.இதனால் மும்பையில் நடைபெற வேண்டிய ஐ.பி.எல். போட்டியை வேறு இடத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் பார்வையாளர்கள் இன்றி ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.