தமிழ்நாடுராமநாதபுரம்

ராமேஸ்வரத்தில் 24 வயது வாலிபர் கத்தியால் குத்திக் கொலை;

ராமேஸ்வரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார்
இவர்  நேற்று மாலை கடலுக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இன்று காலை 4:00 மணி அளவில் மீன்பிடி துறைமுக கடற்கரை அந்தோணியார் கோவில் பகுதியில் மனோஜ் குமார் கத்தியால் குத்தி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

தகவலறிந்த துறைமுக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மீன்பிடித் துறைமுக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button