தமிழ்நாடு

தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும்தான் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் பொதுமக்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாச்சியார்பட்டியில்  அம்மா நகரும் நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர். மு.க.ஸ்டாலின்  ஒருவர் தான் நிம்மதியாக இல்லை என விமர்சித்தார். ஸ்டாலினுக்கு தான் ஆட்சிக்கு வர முடியவில்லை, முதல்வராக முடியவில்லை என்று நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர். மு.க.ஸ்டாலின்  ஒருவர் தான் நிம்மதியாக இல்லை, ஓடிடி  பிரச்சனை உலகளவிய பிரச்சினை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் சுமார் 50 ஆண்டு கால சாதனை செய்த  மனநிறைவு உள்ளதாகவும்,  திரைப்படத்துறையில் ஓடிடி  பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சினை என்பதால் இதனை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை எனவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button