தமிழ்நாடு

3 நாள் வருமான வரித்துறை சோதனை நிறைவு – விசாரணைக்கு ஆஜராகுமாறு பால் தினகரனுக்கு சம்மன்

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடுகள், இந்திய முதலீடுகள் குறித்த பணபரிவர்த்தனை ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 120 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பல முக்கிய ஆவணங்களும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது கனடாவில் உள்ள பால் தினகரனை அடுத்த வாரம் சென்னையில் ஆஜராக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

6 Comments

 1. It is perfect time to make a few plans for the future
  and it is time to be happy. I have read this publish and if I may I
  want to counsel you some fascinating things or advice.
  Maybe you could write subsequent articles relating to this article.
  I want to read even more issues about it!

 2. Have you ever thought about including a little bit more than just your articles?
  I mean, what you say is fundamental and everything. Nevertheless just imagine if you added some great photos or video clips to give your posts more, “pop”!

  Your content is excellent but with images and clips, this site could certainly be one of the very
  best in its niche. Wonderful blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button