அரசியல்கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்பாரா எஸ்.வி.சேகர்? – சென்னை காவல்துறை கெடு விதிப்பு

தமிழகத்தில் உள்ள சிலைகள் மீது காவி நிறம் பூசி களங்கம் படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என்று கூறும் தமிழக முதல்வர், தேசிய கொடியில் உள்ள காவியை மட்டும் வெட்டிவிட்டு ஆகஸ்டு 15ல் கொடியை ஏற்றுவாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், தேசிய கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும் என்றும் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், தமிழக முதல்வரை அவதூறாக பேசியது, தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக கூறி எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, நாட்டின் கண்ணியத்திற்கு ஊறு விளைவித்தது தொடர்பாக, எஸ்.வி.சேகரை தேசிய கவுரவ பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 24 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசிய கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் தற்போது கருத்து தெரிவித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதேபோல், எஸ்.வி.சேகர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றியபோது, தேசிய கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருந்ததாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பழிவாங்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியிருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்தநிலையில், தேசிய கொடியை அவமதித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவகாசம் வழங்கப்பட்டது. மன்னிப்பு கேட்காவிட்டால் கைது செய்வோம் என நீதிபதியிடம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் தற்போது 2ம் கட்ட விசாரணைக்காக இன்று ஆஜராகினார். ஏற்கனவே கடந்த 24ம் தேதி சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவர் வெளியிட்ட வீடியோ குறித்த விளக்கங்களும் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

6 Comments

  1. Hi there! This post couldn’t be written any better! Reading through this post reminds me of my previous room mate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thank you for sharing!

  2. I?¦ve been exploring for a little for any high quality articles or blog posts in this sort of space . Exploring in Yahoo I at last stumbled upon this site. Studying this information So i am happy to convey that I have a very just right uncanny feeling I found out just what I needed. I so much undoubtedly will make certain to don?¦t fail to remember this web site and provides it a glance on a constant basis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button