விளையாட்டு

ஆஸ்திரேலியாவை மிரட்டிய இந்தியா… கடுப்பான பவுலர்கள்…ட்ராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

சிட்னியில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில்  338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் ஆஸி., அணி 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 407 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று 5 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியை விரைவாக சுருட்ட ஆஸி., அணியும், ஒன்று வெற்றி இல்லை என்றால் டிரா செய்ய இந்திய அணியும் களத்தில் இறங்கின.

ரஹானே 22 ரன்கள், புஜாரா 77 ரன்கள், ரிஷப் பண்ட் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க  வெற்றியை நோக்கி இந்தியா நகர்ந்தது. ஆனால் 6 விக்கெட்டுக்கு களமிறங்கிய அஷ்வின், விஹாரி ஜோடி ஆஸி பவுலர்களை கொடூரமாக சோதித்தனர். போட்டியை டிரா செய்ய திட்டமிட்ட அவர்கள் பந்துகளை தடுத்து ஆடவே முயன்றனர்.

குறிப்பாக விஹாரி 161  பந்துகளை சந்தித்து 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுக்க ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. அஷ்வின் ரன்களுடன் 39 களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட், லையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button