கவர் ஸ்டோரிதமிழ்நாடு

ஈஸ்வரன் திரைப்படத்தை முடக்கும் மாஸ்டர் படக்குழு – செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத டி.ராஜேந்தர்;

மாஸ்டர் பட வெளியீட்டிற்காக ஈஸ்வரன் படத்தை முடக்கப் பார்க்கிறார்கள்”என் மகனுக்கு படிக்க கற்றுத்தராவிட்டாலும் நடிக்க கற்றுத் தந்தேன்”செய்தியாளர் சந்திப்பில் கண் கலங்கிய டி.ராஜேந்தரால் பரபரப்பு

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ ஈஸ்வரன் ‘ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதை தடுக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டி சென்னை தியாகராயநகரிலுள்ள தனது இல்லத்தில் இயக்குநர் டி. ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார் …

அப்போது பேசிய அவர் ,” நாளை மறுநாள் மாதர் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ளது. கடைசி நேர கழுத்தறுப்பு மூலம் படத்தின் வெளியீட்டை நிறுத்த முயற்சி நடக்கிறது. சதியை வெல்ல மதி தேவை .

கள்ள ஓட்டு மூலம் தயாரிப்பாளர் சங்கத்தினர் அண்மையில் நடந்த தேர்தலில் வென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. விபிஎப் , கேளிக்கை வரி , ஜிஎஸ்டிக்கு எதிராக நான் போராடியதால் , மாஃபியாக்கள் சேர்ந்து என்னை பழிவாக்கும் நோக்கில் படத்தை தடை செய்ய முயற்சிக்கிறார்கள்.

கேரளாவில் உள்ளாட்சி வரி தடை செய்யப்பட்டதை பார்க்கும்போது எனது மனது பரிதவிக்கிறது.’ அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ‘ படத்தின் நட்டத்தை சிலம்பரசன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென கூறி சிம்புவை அவமானப்படுத்தினர்.

விசால் , கதிரேசன் ஒருதலைப்பட்சமாக இவ்வாறு முடிவு செய்தனர். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் , விசால் மீது சிம்பு தொடர்ந்த இரு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. படம் வெளியாக 2 நாள் இருக்கும்போது ஈரத்துணி போட்டு கழுத்தை நெரிக்கின்றனர். ஈஸ்வரனுக்கு திரையரங்கு தர மறுக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத்தினர் 14 ம் தேதி ஈஸ்வரன் படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மைக்கேல் ராயப்பன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இவ்வாறு செய்கிறார்கள்.

நடப்பது மக்களாட்சியா, மன்னராட்சியா..? அமைச்சரின் ஆதரவு இருப்பதாக க்யூப்பை தயாரிப்பாளர் சங்கத்தினர் மிரட்டியுள்னர். ஆனால் அமைச்சரை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது யாருக்கும் ஆதரவு தரவில்லை என கூறினார்.

வெளிநாடுகளில் ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளதை சுட்டிக் காட்டி தமிழகத்தில் திரையிடக் கூடாது என கூறுகின்றனர். பெரிய படத்தின் ஓரத்தில் சிறு படமாக வரட்டும். சர்க்கரை பொங்கலோடு சேர்ந்து வெண் பொங்கலும் பொங்குவதைப் போல ஈஸ்வரன் வெளியாகட்டும்.

ஆளுங் கட்சி , எதிர் கட்சி இது குறித்து கேள்வி எழுப்பாதா..? கப்பம் கட்டித்தான் நடிக்க வேண்டுமென சிலம்பரசனை நிர்ப்பந்திக்கிறார்கள். என் மகனுக்காக பிள்ளையார் சுழி போடுவேன்.

நான் கூறியதை கேட்காமல் நடிகர் சங்க தேர்தலில் விசாலை எதிர்த்து சிம்பு போட்டியிட்டார். செங்கல்பட்டு பகுதியில் ஒரு ஊரில் 4 திரையரங்கு இருந்தாலும் அங்கு ஒரே ஒரு குறிப்பிட்ட படத்தைத்தான் திரையிட வேண்டுமென கூறுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு நானும் மனைவியும் வெளியில் வருவதை தவிர்த்தோம். நான் பெற்ற பிள்ளையின் படம் திரைக்கு வர வேண்டுமென இன்று வெளியில் வந்துள்ளேன் என்று கண் கலங்கினார் டி. ஆர் ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய் ..’ என பாடத் தோன்றுகிறுது. என் மகனுக்கு படிக்க கற்றுத்தராவிட்டாலும் நான் நடிக்க கற்றுத் தந்தேன்.

பெரிய படமான மாஸ்டர் போல ஈஸ்வரனுக்கும் தருவோம் பூஸ்டர் என வாய்ப்பளித்த திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு நன்றி. மாஸ்டருக்கு முன்பு ஈஸ்வரன் வெளியாக கூடாது என பின்னால் நின்று வேலை பார்க்கிறார்கள்”, என்றார்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button