3வது டெஸ்டில் தமிழக வீரர் நடராஜன் இல்லை…. ரசிகர்கள் அதிருப்தி…

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளில் 2 போட்டி முடிந்துள்ள நிலையில், 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
அதில் ரஹானே கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். அணியில் சுப்மன் கில், புஜாரா, அனுமன் விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், சைனி ஆகியோர் விளையாட உள்ளனர். இதில் சைனிக்கு இது அறிமுகப் போட்டியாகும்.
அதேசமயம் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் இப்போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை என்பதால் பல கிரிக்கெட் பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.