102 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை..!!! காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர்

தஞ்சை மாவட்டத்தில் 2886 வாக்குச்சாவடி மையங்களில் 102 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பேட்டி அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் தஞ்சை மாவட்டத்தில் 2886 வாக்குச்சாவடி மையங்கள் செயல்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

தொடர்ந்து பேசிய அவர், தஞ்சை மாவட்டத்தில் 2886 வாக்குச்சாவடி மையங்களில் 102 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும் அந்த மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்துள்ளார்

Back to top button