சுதந்திரம் பெற்றதுமுதல் வாக்களிக்கும் 105 வயது முதியவர்..!!!

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் வாக்களித்து வந்த 105 வயது முதியவர், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கோவை மாவட்டம் கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர், மாரப்ப கவுண்டர். 1916-ம் ஆண்டு ஜுன் 1-ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது, 105 வயதாகிறது.

இவர், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1952-ம் ஆண்டுமுதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் தவறாது வாக்களித்துள்ளார்.

வாக்களிப்பது நம் அனைவரின் கடமை என்று கூறும் மாரப்ப கவுண்டர் தாத்தா, தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும், வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்து சென்று வாக்களித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், முதியவரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர் .

 

Back to top button