சேலம் வழியாக செல்லும் 12 ரயில்கள் ரத்து… பயணிகள் கவலை…

பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும்  12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட காசிபேட்-பல்கர்ஷா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் சேலம் வழியாக செல்லும் கோவை-நிஜாமுதீன் சிறப்பு ரயில் (06077) ஏப்ரல் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும், நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரயில் (06078) ஏப்ரல் 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் கோரக்பூர்-கொச்சிவேலி சிறப்பு ரயில் (02511) ஏப்ரல் 11, 15, 16, 18, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் கொச்சிவேலி-கோரக்பூர் சிறப்பு ரயில் (02512) 13, 14,18,20,21 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

பரோனி-எர்ணாகுளம் சிறப்பு ரயில் (02521) ஏப்ரல் 12, 19 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம்-பரோனி சிறப்பு ரயில் (02522) ஏப்ரல் 16, 23 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம்- நிஜாமுதீன் சிறப்பு ரயில் (06167) ஏப்ரல் 13, 20 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06168) ஏப்ரல் 16, 23 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த ரயில்கள் உள்பட சேலம் வழியாக செல்லும் மேலும் 4  சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Back to top button