கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர், சென்னை விமான நிலையத்தில் கைது…

கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் போலீசார் கையில் சிக்காமல் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் இவரை தேடப்படும் கொலை குற்றவாளி என போலீசார் அறிவித்தனர். இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.

துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திருக்கு வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளின் கடவுச்சீட்டினை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கடந்த மூன்று ஆண்டுகளாக துபாயில் தலைமறைவாக இருந்து வந்த ராஜாவும் பயணிகளோடு பயணிகளாக வந்துள்ளார். அவரது கடவுச் சீட்டினை பரிசோதனை செய்த குடியுரிமை அதிகாரிகள் தலைமறைவாக இருந்து வந்த ராஜா என்பது தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.