வாக்கு இயந்திரங்களை மாற்றி வைத்ததாக குற்றச்சாட்டு..!!! தோப்பு வெங்கடாசலம் வாக்கு மையத்தில் தர்ணா

வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்களை மாற்றி வைத்ததாக குற்றம்சாட்டி பெருந்துறை எம்எல்ஏவும் சுயேச்சை வேட்பாளருமான தோப்பு வெங்கடாசலம் வாக்கு மையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், தென்னந்தோப்பு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருடைய தென்னந்தோப்பு சின்னம் இரண்டாவது பெட்டியில் இரண்டாவது சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 30க்கும் மேற்பட்ட வாக்கு மையங்களில் முதல் வாக்கு இயந்திரத்தை இரண்டாவது இயந்திரமாகவும் இரண்டாவது எந்திரத்தை முதல் இயந்திரமாகவும் மாற்றி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், ஆய்வு செய்ததில் வாக்கு இயந்திரங்கள் மாற்றி வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் தவறை சரிசெய்து தேர்தல் விதிமுறைகள் படி முறையாக அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

இது பொதுமக்களை குழப்புவதாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது எனவும் குற்றம் சாட்டிய தோப்பு வெங்கடாசலம் தர்ணாவில் ஈடுப்பட்டார்.

Back to top button