அதிமுக தோல்விக்கு சீமான் தான் காரணம்… 60 தொகுதிகளில் வெச்சு செஞ்ச நாம் தமிழர் கட்சி!!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வென்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வருகிற 7ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகள் 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை ஆனால் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 6.65% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதோடு 60 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை தடுத்துள்ளது.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தான் 48ஆயிரத்து 957 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். முப்பதாயிரத்துக்கு மேல் 2 வேட்பாளர்கள் வாக்குகளை வாங்கியுள்ளனர். 18 வேட்பாளர்கள் இருபதாயிம் முதல் முப்பதாயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். 33 வேட்பாளர்கள் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றிருக்கிறார்கள். 104 தொகுதிகளில் பத்தாயிரம் முதல் 15 ஆயிரத்துக்குள் நாம் தமிழர் வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.

இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 29 லட்சத்து 67ஆயிரத்து 853 வாக்குகளை 234 தொகுதிகளிலும் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதமும், மூன்றாம் இடம் பிடித்த சீமானின் கட்சியால் அதிமுகவிற்கு பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது. இதில் திமுக – 37.15% அதிமுக – 33.28% காங்கிரஸ் – 4.28% மக்கள் நீதி மய்யம் 2.4% நாம் தமிழர் கட்சி 6.6% அமமுக 2.4% பாட்டாளி மக்கள் கட்சி – 3.81% இந்திய கம்யூனிஸ்ட் – 1.09% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.85% தேமுதிக – 0.43% பாஜக – 2.63% விசிக- 1.3% முஸ்லிம் லீக்- 0.48% வாக்கு சதவிகிதங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடஙகளில் திமுக அதிமுக போட்டியில் புகுந்து விளையாடியது நாம் தமிழர் கட்சி தான். அதில் 20 ஆயிரம், 30 ஆயிரம் என்கிற அளவிற்கு ஓட்டுக்களை சில தொகுதிகளில் வாங்கியுள்ளது. அதேபோல சென்னையில் திருவெற்றியூர், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, பொன்னேரி, செய்யூர், திருப்போரூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவை வேட்டையாடிவிட்டது நாம் தமிழர் கட்சி.

இதில் கொடுமை என்னன்னா? சென்னை தி நகரில் ஒட்டு வித்தியாசம் திமுக அதிமுக இடையே வெறும் 137 தான். ஆனால் நாம் தமிழர் வேட்பாளர் வாங்கியது 14567 ஓட்டுகள் ஆகும். இதேபோல் மைலாப்பூரில் 10 10124 வாக்குகள் வாங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி. வேளச்சேரியில் 14130 ஓட்டுகள் பெற்றுள்ளது.

செங்கல்பட்டு தொகுதியில் நாம் தமிழர் கட்சி 26868 ஓட்டுகள் வாங்கி இருந்தது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 26ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வாங்கி இருந்தது. திருப்போரூரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள், செய்யூரில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள், பொன்னேரியில் 19 ஆயிரம் வாக்குகள் வாங்கி யுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல தொகுதிகளில் சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வாங்கி உள்ளது.

இதேபோல, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் பல தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வெற்றியை நாம் தமிழர் கட்சி தடுத்துள்ளது. அதேபோல அரக்கோணம், காட்பாடி, அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், செங்கம், கலசப்பாக்கம், போளூர், செய்யாறு, ஓசூர், பர்கூர், காங்கேயம், திருப்பூர் தெற்கு, தாராபுரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு சீமான் தான் காரணம்.

இதேபோல் ஈரோடு, கிழக்கு, ஊட்டி, குன்னூர், அந்தியூர், அரியலூர், ஜெயங்கொண்டம், மதுரை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி நாம் தமிழர் கட்சியால் பறிபோயுள்ளது,

இதுபோக, ஆண்டிபட்டி, பாபநாசம், திருவிடைமருதூர், கந்தர்வகோட்டை, திருமயம், பரமக்குடி, திருவாடனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, மானாமதுரை, சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், ராதாபுரம்,ஒட்டப்பிடாரம், காரைக்குடியிலும் அதிமுக கூட்டணியின் வெற்றியை நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சிதைத்துள்ளது.

Back to top button