மீண்டும் முழு ஊரடங்கா? ஸ்டாலின் வீட்டில் அதிகாரிகள் ஆலோசனை! நடந்தது என்ன?

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கும்போதே அவரது வீட்டுக்கு அதிகாரிகள் படையெடுத்தனர். சுகாதாரத்துறை செயலாளர் மட்டும், மற்ற அதிகாரிகள் போல அல்லாமல் ஒரு கையில் பூங்கொத்து இன்னொரு கையில் கொரோனா தொடர்பான கோப்புகளோடு ஸ்டாலினை சந்தித்தார்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்காவிட்டாலும் தேர்தல் முடிவுகளில் அவரே வெற்றிபெற்றதால் அவரிடம் ஆலோசனை நடத்தினார் ஜெ. ராதாகிருஷ்ணன். அதன் பிறகு நேற்று மீண்டும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் நடத்தினர்.

நேற்று நடந்த இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனா தொற்று இருபதாயிரத்திற்கும் மேல் சென்றுகொண்டிருப்பதால் அடுத்து ஊரடங்கு விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி பொறுப்பேற்க உள்ள முதல்வர் ஸ்டாலினுடன் அதிகாரிகள் தற்போதையுள்ள சூழலில் ஊரடங்கு தான் ஒரே வழி என்று கூறியுள்ளார்.

ஆனால் ஸ்டாலினோ தமிழகத்தின் நிதி நிலைமை, ஊரடங்கு விதித்தால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்டுவதற்கான நடவடிக்கை குறித்து யோசித்திருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பே, திமுக ஆட்சிக்கு வந்தால் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது தொற்று நாளுக்கு நாள் உக்கிரமாக இருப்பதால் அதிகாரிகள் ஸ்டாலினிடம் இதுகுறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் தமிழகம் முழுதும் திமுக கட்சி நிர்வாகிகளிடம் கொரோனா பரவல் பற்றி விவாதித்து தனக்கு ஒரு அறிக்கை தருமாறு ஸ்டாலின் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. கட்சியினர் கொடுக்கும் தகவலை பொறுத்தே ஊரடங்கு பற்றி ஸ்டாலின் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Back to top button