அதிமுக ஆட்சியில் 50 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது: பா.சிதம்பரம் கேள்வி…

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக அரசு செய்தது என்ன என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 50 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியது தான் வெற்றி நடை போடும் ஆட்சியா என வினவினார். மேலும் அதிமுக அறிக்கையில கூறப்பட்ட அனைத்தும் வெற்று அறிவிப்புகள் என குற்றம்சாட்டிய சிதம்பரம், பெட்ரோல் டீசல் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பனமடங்கு உயர்ந்து விட்டதை எடுத்துரைத்தார். தேர்தல் வெற்றியை திருடுவதில் கைத்தேர்ந்தவர்கள் பாஜகவினர் என்றும் சிதம்பரம் சாடினார்.

 

Back to top button