பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுபாடுகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும்:மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருப்பதாகவும்,இந்த துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியைத் துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,அத்தகைய சங்கிலியைத் துண்டிக்கவே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின்,கொரோனா நோய்ப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Back to top button