அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக.! – அடித்து விரட்டிய விசிக தொண்டர்கள்

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 130ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆங்காங்கே அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தருவதற்கு முன்னால், பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு வருகை தந்ததால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் இரண்டு கட்சியினருக்கும் மோதல் உருவாகும் சூழல் நிலவியது. ஒரு கட்டத்துக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பாஜகவினரை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Back to top button