“அன்பு நண்பர் ரஜினி” … அன்புமணி ராமதாஸின் ட்வீட்டால் இன்ப அதிர்ச்சி…

தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவித்து மத்திய அரசு கெளரவித்திருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸூம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்த்  அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’ என தெரிவித்துள்ளார்.

இதனை பலரும் ஆச்சரியத்துடன்  லைக் செய்துள்ளனர். ஏனெனில் கடந்த காலங்களில் ரஜினிக்கும், பாமகவுக்கு இடையிலான பிரச்சனைகளை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார். ஆனால் அன்புமணி ரஜினியை அன்பு நண்பர் என தெரிவித்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.