பேருந்து பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு…..!!

தமிழகத்தில் நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிதீவிரமாக வீசிக் கொண்டிருகிறது. இதனால் மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்த வண்ணம் உள்ளது. இந்த வகையில்  நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாட்டில், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்படும், மதியம் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் நிலையில் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Back to top button