சென்னையில் கொடூரம்…‘அண்ணியை’ கொன்று பழிக்குப் பழி தீர்த்த மைத்துனர்கள்…

அண்ணனை பிரிந்து தனியே வசித்து வந்த அண்ணியை நடுவீதிக்கு வரவழைத்து, மைத்துனர்கள் 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்த குலை நடுங்கும் கொடூர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை குருசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூபன். இவருக்கு மனைவி சுப்ரியா மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக ரூபன் மற்றும் சுப்ரியா பிரிந்து வசித்துள்ளனர்.

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன், சுப்ரியாவிடம் தனியே பேசவேண்டும் என கூறி, ரூபனின் சகோதர்களான சுதாகர், பிரேம்குமார் ராம்குமார் மற்றும் தினகரன் ஆகியோரை தனியே அழைத்து வந்துள்ளனர். இரவு நேரம் என்றும் பாராமல், சுப்ரியா அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க ஆள்அரவமற்ற குருசாமி நகர் 9வது தெருவின் நடுவீதிக்கு வந்துள்ளார்.

அங்கு பேச்சுக்கொடுத்தபடியே மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்த ரூபனின் சகோதரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சுப்ரியாவின் கழுத்து, தலை போன்ற இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். சுப்ரியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரியா உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வௌியாகியுள்ளன. அதன்படி முன்விரோதம் காரணமாக ரூபனின் சகோதரனான ரமேஷ் என்பவரை சுப்ரியா கூலிப்படை ஏவி கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பழித்தீர்க்கும் நோக்கிலே ரூபனின் சகோதரர்கள் சுப்ரியாவை கொன்றதாக தெரிகிறது.

இதையடுத்து சுப்ரியாவை கொலை செய்ய கொலைத்திட்டம் தீட்டியதாக அவரது கணவர் ரூபனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது 4 சகோதரர்களையும் தேடி வருகின்றனர்.

Back to top button