டியூஷனுக்கு சென்று சடலமாக வீடு திரும்பிய மாணவி… அதிர்ந்து போன பெற்றோர்….

சென்னையில் சைக்கிள் டியூஷனுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி, ரத்த காயங்களுடன் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நேரு நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஷாலினி பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று எம் நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றுவிட்டு மாலையில் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.
அவரது சைக்கிள் செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, செங்குன்றம் நோக்கி வேகமாக வந்த வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷாலினி, தலையில் பலத்த காயத்துடன், ரத்தம் வெளியேற சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து வந்த மாதவரம் போலீசார், மாணவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Back to top button