சென்னையை மிரட்டும் கொரோனா…ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி…

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு உலகளவில் மனித இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தில் மக்கள் மனதில் ஆறாத வடுவாக மாறியது கொரோனா பாதிப்பு. இதனால் பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தது, வொர்க் ஃப்ரம் ஹோம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று வரை இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவேயில்லை.

இந்நிலையில் சரியாக ஒருவருடம் கழித்து மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாகியுள்ளது. தஞ்சையில் பள்ளி மாணவிகள் 150க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் 9,10,11 ஆம் வகுப்புகளுக்கு கால வரையின்றி விடுமுறௌ விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடியில் கிளைகளை  கொண்ட மருத்துவத்துறையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் மற்ற அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்  40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.